நண்டு குழம்பு
Nandu kulambu is a mouthwatering spicy, traditional and authentic recipe. It has a good flavor and tastes good with hot rice.
Servings6 people
Prep Time15 minutes
Cook Time40 minutes
Ingredients
- 7 நண்டு
- 1 மேசைக்கரண்டி சோம்பு
- 1மேசைக்கரண்டி மிளகு
- 1/4கப் தேங்காய் துருவல்
- 10 சின்ன வெங்காயம்
- 1 1/2 மேசைக்கரண்டி கல் உப்பு
- 2 சின்ன தக்காளி
- 1/4தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 1/2 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
- புளிபெரிய நெல்லிக்காய் அளவு
- 4 பல் பூண்டு
- 1/2தேக்கரண்டி கடுகு
- 1 முருங்கைக்காய்
- 2 பச்சை மிளகாய்
Instructions
- நண்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். 4 சின்ன வெங்காயத்தை மட்டும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கவும். முருங்கைகாயை 2 இன்ச் அளவு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும்.
- மிக்ஸியில் தேங்காய் துருவலுடன், மிளகு, சோம்பு, பூண்டு சேர்த்து ஒரு முறை அரைத்து விட்டு பிறகு அதனுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- புளியுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். மேலும் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும். புளிக்கரைசலுடன் அரைத்த விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கின சின்ன வெங்காயத்தை போட்டு அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
- வெங்காயம், தக்காளி வதங்கியதும் அதில் நண்டை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
- பின்னர் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி மேலும் அரை கப் தண்ணீர் சேர்த்து, அதில் முருங்கைக்காய் துண்டுகளை போடவும்.
- 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். பின்னர் குழம்பு சற்று கெட்டியாக ஆனதும் இறக்கி விடவும்
- சுவையான நண்டு குழம்பு தயார்.
Recipe Notes
Products we recommend with this Recipe:
Top Mixer Grinder Brands in India
Mixer Grinder Price Below 3000
5 Best Philips Mixer Grinder In India 2019
The post Nandu Kulambu Recipe in Tamil appeared first on HungryForever Food Blog.